குடும்பத்துடன் சென்று வாக்கினை பதிவு செய்தார் மஹிந்த


2020 இற்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் வாக்களிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (05) காலை ஏழு மணிக்கு வாக்களிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் மாலை ஐந்து மணியுடன் வாக்களிக்கும் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ச, மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

குடும்பத்துடன் சென்று வாக்கினை பதிவு செய்தார் மஹிந்த குடும்பத்துடன் சென்று வாக்கினை பதிவு செய்தார் மஹிந்த Reviewed by Sifnas Hamy on August 05, 2020 Rating: 5