கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது

 Covid-19 Update - Economic Response - Business Wairarapa

உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (31) காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு 2.53 கோடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 2,53,83,993 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,50,588 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் கொரோனா பாதித்தோரில் 1,77,06,667 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் தற்போது 68,26,738 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 61,104 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 61,73,236 பேரும், பிரேசிலில் 38,62,311 பேரும், இந்தியாவில் 36,19,169 பேரும், ரஷியாவில் 9,90,326 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர்.
கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது Reviewed by Editor on August 31, 2020 Rating: 5