(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டறி கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களை மரியாதையின் நிமித்தம் கடந்த வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் வேளையில் சந்தித்தார்.
இச்சந்திப்பு பாராளுமன்றத்தில் உள்ள விசேட விருந்தினர்களுக்கான அறையில் நடைபெற்றதுடன், ரஷ்ய தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஜோனா பிரிட்செட்டும் கலந்துகொண்டிருந்தார். சந்திப்பின் இறுதியில் சபாநாயகரினால் ரஷ்ய தூதுவருக்கு தேனீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.
நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
ரஷ்ய கூட்டரசின் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்
Reviewed by Editor
on
August 31, 2020
Rating:
Reviewed by Editor
on
August 31, 2020
Rating:

