அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி - இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு


இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேணல் ரைவிஸ் கொஸ் அவர்கள் பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் உடனான சந்திப்பு கடந்த 07ம் திகதி ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நல்லுறவு கலந்துரையாடலில் இரு நாடுகளிடையே மேம்படுத்த வேண்டி முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு இலங்கையில் கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதில் இலங்கை இராணுவம் மற்றும் பங்குதாரர்களின் பங்களிப்பை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி பாராட்டினார். இந் நல்லெண்ண சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றி கொள்ளப்பட்டது.

அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி - இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி - இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு Reviewed by Editor on August 10, 2020 Rating: 5