காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு பழைய கட்டிடத்துக்கு மாற்றம்

                                           


(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு இன்று (10)திங்கட்கிழமை தொடக்கம் வைத்தியசாலைக்குரிய கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடமாக காத்தான்குடி ஆதார வைத்தியாசலை மாற்றப்பட்டதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு உட்பட பல பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசரா மண்டபம் காத்தான்குடி நகர சபையின் பொது நூலக கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வந்தன.

இந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெற்று சென்றதையடுத்து தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சொந்த கட்டிடத்துக்கு இன்று மாற்றப்பட்டுள்ளன.

வெளியோநாயாளர் சிகிச்சைப் பிரிவு பற் சிகிச்சைப் பிரிவுஇ தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற பிரிவுகள் பழைய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.



காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு பழைய கட்டிடத்துக்கு மாற்றம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு பழைய கட்டிடத்துக்கு மாற்றம் Reviewed by Editor on August 10, 2020 Rating: 5