நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி இயந்திரம் நேற்று (24) அதிகாலை தொடக்கம் மின் உற்பத்தியை ஆரம்பித்ததாக மின் நிலையத்தின் முகாமையாளர் இந்திரஸ்ரீ கால்லகே தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஏனைய மின் பிறப்பாக்கி இயந்திரங்களையும் துரிதமாக செயற்படுத்த பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதேவேளை, நாடு பூராகவும் இடம்பெற்ற மின்சார துண்டிப்பு பற்றி ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி இயந்திரத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்
Reviewed by Editor
on
August 25, 2020
Rating:
Reviewed by Editor
on
August 25, 2020
Rating:
