அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும், விமல் வீரவன்சவ தெரிவிப்பு

 

(றிஸ்வான் சாலிஹூ)

கிழக்கில் பொதுஜன பெரமுனயின் ஆட்சியை ஆதரித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்சவ குரல் கொடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சரவை நியமனத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அது வழங்கப்படாத நிலையில், எதிர்வரும் நாட்களில் 19ஐ நீக்கி இடம்பெறும் என எதிர்பார்க்கும் அமைச்சரவை விஸ்தரிப்பின் போது அமைச்சுப் பதவி அதாஉல்லாஹ்க்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று அமைச்சர் விமல் வீரவன்சவ தெரிவித்துள்ளார்.

அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும், விமல் வீரவன்சவ தெரிவிப்பு அதாவுல்லாவுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும், விமல் வீரவன்சவ தெரிவிப்பு Reviewed by Editor on August 24, 2020 Rating: 5