(றிஸ்வான் சாலிஹூ)
முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த, அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான சந்திப்பு அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் இன்று (29) சனிக்கிழமை காலை திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் தலைமையில் இடம்பெற்றது.
அரபு கல்லூரிகளில் ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளின் போதனை மற்றும் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் போன்றன பற்றி விரிவாக இங்கு ஆராயப்பட்டது.
இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தில் கலாச்சார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அரபு கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட அரபுக் கல்லூரிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு
Reviewed by Editor
on
August 29, 2020
Rating:
Reviewed by Editor
on
August 29, 2020
Rating:
