(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் பங்குபற்றலுடன் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று அஹ்லுல் ஸுன்னாஹ் ஜும்மா பள்ளிவாசலில், வழிகாட்டல் மையத்தின் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.அன்சார் (தப்லீகி) தலைமையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக, வைத்தியசாலையின் வேண்டுகோளை ஏற்று இந்த இரத்தான முகாம் இன்று காலை 9.00மணி முதல் மாலை 4.00மணி இடம்பெற்றது.
இந்த வழிகாட்டல் மையத்தினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் அம்பாறை போதனா வைத்தியசாலைகளுக்கு மிக நீண்ட காலமாக இரத்ததான முகாம்களை நடாத்தி இரத்த நன்கொடைகளை வழங்கி வருகின்றார்கள்.
இன்று நடைபெற்ற இரத்தான நிகழ்வில் சுமார் 177 பேர் இரத்தானம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 30, 2020
Rating:




