நிந்தவூர் அல்-அஷ்ரக் ம. ம. வி. தேசிய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியைகளில் ஒருவரான திருமதி. கலாபதி சிவராஜா அவர்கள் இன்றுடன் (21) தனது ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
இவர் 1987 டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி கல்முனை காமல் பத்திமா கல்லூரியில் தனது ஆசிரிய பணியை முதன் முதலில் ஆரம்பித்து சுமார் 30 வருடங்கள் காமல் பத்திமா கல்லூரியிலும் அதை தொடர்ந்து 2017.அக்டோபர் 24 ஆம் திகதி தொடக்கம் 2020.ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை இன்றுடன் 33 வருட சேவையைப் பூர்த்தி செய்தவராவர். இவர் கல்முனை காமல் பத்திமா கல்லூரியை முன் கொண்டு வர பல அர்பணிப்புகளை செய்தவராவர். இவர் அக் காலப் பகுதியில் காமல் பத்திமா கல்லூரியின் உதவி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
2017.ஒக்டோபேர் 24 ஆம் திகதி எமது அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு வருடாந்த இடமாடம் மூலம் வருகை தந்த இன்று 2020.08.21 ஆம் திகதி தனது ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஓய்வு பெற்று செல்வதை முன்னிட்டு பாடசாலையின் உயர்தர பிரிவின் தலைவர் எம்.ஏ.அச்சு முஹம்மட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உயர்தர பிரிவு ஆசிரிய ஆசிரியைகள் அணைவரும் கலந்து சிறப்பித்தனர்.
(ஆசிரியர்- சப்ராஸ்)
Reviewed by Editor
on
August 21, 2020
Rating:
