பாராளுமன்ற தெரிவுக் குழு நியமனம்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 114 இலக்கத்துக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் சேவைக்கான தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை தவிசாளராகவும், அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தவர்களையோ உள்ளடக்கிய பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்டதாக தெரிவுக்குழு அமைந்துள்ளது.

நிமல் சிறிபால.டி சில்வா, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவங்ச, பிரசன்ன ரணதுங்க, லக்ஷ்மன் கிரியல்ல, கயந்த கணாதிலக, ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், கௌரவ செல்வம் அடைக்கலாதன் ஆகியோர் தெரிவுக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இக்குழுவின் முதலாவது கூட்டம் இன்று (21) பிற்பகல் 2 மணிக்கு சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

 (நன்றி தெரன)



பாராளுமன்ற தெரிவுக் குழு நியமனம் பாராளுமன்ற தெரிவுக் குழு நியமனம் Reviewed by Editor on August 21, 2020 Rating: 5