நிந்தவூர் வேன் பிபிலயில் பாதையை விட்டு விலகி விபத்து...

கண்டியில் இருந்து நிந்தவூர் நோக்கி வந்து கொண்டிருந்த வான் பிபிலயில் பாதையை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகிய, இச்சம்பவம் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயம் அடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வர் பிபில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

காயமடைந்த அனைவரும் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிந்தவூர் வேன் பிபிலயில் பாதையை விட்டு விலகி விபத்து... நிந்தவூர் வேன் பிபிலயில் பாதையை விட்டு விலகி விபத்து... Reviewed by Editor on August 30, 2020 Rating: 5