காத்தான்குடியில் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது!!


(ஊடகவியலாளர் எம்.எஸ்.நூர்தீன்)

கடந்த 03.08.1990இல் காத்தான்குடியில் இரண்டு பள்ளி வாயல்களில் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லிம்கள், புலிப் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 30 வருடங்கள் நிறைவுக்கு வந்துள்ளது.

இதனையொட்டி இன்று (3) திங்கட்கிழமை காலை சுபஹ் தொழுகையின் பின் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலில்  ஷூஹதாக்களின் நினைவாக சூறா யாசீன் ஓதப்பட்டு துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளிவாயலின் தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை உட்பட பள்ளிவாயலின் இமாம்கள் நிருவாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது!! காத்தான்குடியில் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது!! Reviewed by Editor on August 03, 2020 Rating: 5