டுபாய், கட்டார் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 722 இலங்கையர்கள் நேற்றும் (01) இன்றும் (02) இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்கள்.
இதில் 667 பேர் டுபாய் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்ற இலங்கையர்கள் என்றும் நேற்று (01) நள்ளிரவு 12 மணியளவில் 335 பேரும் இன்று (2)அதிகாலை 332 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மேலும் இங்கிலாந்துக்கு தொழில் மற்றும் உயர்கல்விக்காகச் சென்ற 41 இலங்கையர்கள், இன்று (02) அதிகாலை 4.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், நேற்று (01) அதிகாலை கட்டாரிலிருந்து 14 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(UTV)
தாயகம் திரும்பும் இலங்கையர்கள்!!!
Reviewed by Editor
on
August 02, 2020
Rating:
Reviewed by Editor
on
August 02, 2020
Rating:
