லெபனான் தலைநகர் பெய்ரூடில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த குண்டு வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பிற்பகலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தலைநகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்தது. மேலும் நகர மையப்பகுதியில் கருமையாக புகை சூழ்ந்திருந்தது. சில உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் பெய்ரூட்டின் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல் தெரிவித்துள்ளன.
துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும், குண்டுவெடிப்பை அடுத்து நகரத்தில் ஒரு கரும் புகை வெளியேறியதாகவும் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
(தெரண)
பெய்ரூடில் பாரிய குண்டுவெடிப்பு
Reviewed by Editor
on
August 04, 2020
Rating:
Reviewed by Editor
on
August 04, 2020
Rating:
