(றிஸ்வான் சாலிஹூ)
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற ஆசனம் கிடைக்கப்பெற்றதை கொண்டாடும் வெற்றி கொண்டாட்டம் நேற்று (08) சனிக்கிழமை மாலை அக்கரைப்பற்று பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக்,
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களுக்கும், வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நீண்ட ஆயுள் வேண்டி துஆப் பிராத்தனை செய்யப்பட்டதோடு, கலந்து கொண்ட அனைவருக்கும் பாற்சோறு வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய காங்கிரஸின் வெற்றி கொண்டாட்டம்!!!
Reviewed by Editor
on
August 09, 2020
Rating:
Reviewed by Editor
on
August 09, 2020
Rating:


