(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று "சூ சிற்றி" விளையாட்டுக் கழகத்தின் மூன்றாவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நாள் போட்டி வெள்ளிக்கிழமை (28) மாலை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 8 அணிகள் பங்குபற்றும் இச்சுற்றுப் போட்டி விளகல் முறையில் நடைபெறும்.
இச்சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டி அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு முஹம்மதியா விளையாட்டு கழகமும், இறக்காமம் IRFC விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் இறக்காமம் IRFC அணி 4:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அறைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்று, போட்டியின் ஆட்டநாயகனாக இறக்காமம் IRFC அணியின் வீரர் எம்.ஏ.எம்.றிசாட் தெரிவு செய்யப்பட்டார்.
இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வில் சூ சிற்றி விளையாட்டு கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் கழக அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
