விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்று (18) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.
இதுவரை எந்தவொரு அமைச்சரதும் பார்வைக்கு கிட்டாத இந்த தமிழ் பிழையானது, இளைஞர்களை வலுப்படுத்த புதிதாக பதவியேற்ற இளம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கண்களுக்கு புலப்பட்டுள்ளது.மும்மொழி கொள்கை இலங்கையில் அமுலில் உள்ளது என்பதனை உறுதிபடுத்தும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறான பிழைகள் குறித்து எதிர்வரும் காலத்தில் அமைச்சரினால் கூடுதல் கவனம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
(News.lk)
கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழ் பிழையை திருத்திய அமைச்சர்
Reviewed by Editor
on
August 18, 2020
Rating:
Reviewed by Editor
on
August 18, 2020
Rating:
