ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான விசாரணைகள் சி.ஐ.டி.யினரால் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிப்பு...!!!

                              

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது, ஆதரவாளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து செல்ல அரச நிதியை பயன்படுத்தியது தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர்.

விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பஸ்களை பயன்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாத் பதியூதீன் 9.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அமைச்சின் பணத்தை செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.


நன்றி - தமிழன்




ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான விசாரணைகள் சி.ஐ.டி.யினரால் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிப்பு...!!!  ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான விசாரணைகள் சி.ஐ.டி.யினரால் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிப்பு...!!! Reviewed by Editor on August 18, 2020 Rating: 5