(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிமனையின் புதிய வலயக் கல்விப்பணிப்பாளராக ஏ.எல்.எம்.காசீம் இன்று (17) திங்கட்கிழமை தனது கடமையை அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிமனையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் - 1 சிரேஷ்ட உத்தியோகத்தரான இவர், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையிலே அக்கரைப்பற்று வலயக் காரியாலயத்திற்கான நியமனம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என்.ரீ.அப்துல் நிசாம் ஆகியோரினால் வழங்கப்பட்டது.
இவர் கொழும்பு வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப்பணிப்பாளராகவும், கொழும்பு ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளராகவும், தேசிய கல்வியியல் கல்லூரிகளில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், மூதூர் மற்றும் அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றிய நீண்ட கால சிரேஷ்ட கல்வி அதிகாரியாவார்.
