சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பிக்கள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர்

 

(றிஸ்வான் சாலிஹூ)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவர் கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேயை செவ்வாய்க்கிழமை (25) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடினர். 

இச்சந்திப்பில் இலங்கையின் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குதல் மற்றும் புதிய அரசியலமைப்பை தயாரித்தல் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 9ஆவது பாராளுமன்றத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து ஆற்றிய உரையில் குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் பிரமுகர்கள் சிலரும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் கூறிவருவது பற்றி அபிப்பிராயங்கள் இதன்போது தெரிவிக்கப்பட்டன.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பிக்கள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பிக்கள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் Reviewed by Editor on August 26, 2020 Rating: 5