அனைத்து சிறைச்சாலைகளிலும் விஷேட அதிரடிப் படையினர் நுழைவாயிலில்

                                       Defence Secretary pledges not to leave space for terrorism

இன்று (25) முதல் நாடாளவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விஷேட அதிரடிப் படையினர் நுழைவாயிலில் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நேற்று (24) திகம்பதானையில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவின் வெள்ளி விழாவிற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கு காரணமென்னவென்றால் சட்ட விரோத செயற்பாடுகளை சிறைச்சாலையினுள் தடுக்கும் முகமாக ஜனாதிபதியின் பரிந்துரைப்பின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் விமானப்படைக்கு சொந்தமான வேவு விமானங்களின் மூலம் காடுகளுக்குள் கஞ்சா செய்கைகளை மேற்கொள்ளும் கும்பல்களை இனங்காண்பதற்காகவும் புலனாய்வு பணிகளும் ஆரம்பமாகியுள்ளன என்றும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் வழிக்காட்டுதலின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கு முன்பு நாட்டில் ஏற்பட்ட கொவிட் – 19 தொற்று நோயை சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரது ஒத்துழைப்புடன் எம்மால் கட்டுபாடிற்குள் கொண்டுவர முடிந்தது. ஆனால் சிலர் வெளிநாட்டவர்களை எமது நாட்டிற்கு அழைத்து வரவில்லை என்று புகார் கூறுகின்றார்கள்.

ஆனால் நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 300 -400 நபர்கள் எமது நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கின்றாரர்கள்.இவர்கள் பரிசோதனையின் பின்பு தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7653 பேர் தங்க வைக்கப்பட்டு இவர்களுக்கான அனைத்து வசதிகளும் எமது அரசினால் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

முன்பு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் 100 அறைகளை கொண்ட ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது சிறிய அளவிளான ஹோட்டல்களுக்கு அனுப்பப்படுகின்றனர் இதனால் ஹோட்டல்காரர்களும் பயனடைகின்றனர். அத்துடன் இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சுகாதார வழக்காட்டுதலின் கீழ் இந்த கொரோனா தொற்றுநோயிலிருந்து விடுவிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

அனைத்து சிறைச்சாலைகளிலும் விஷேட அதிரடிப் படையினர் நுழைவாயிலில் அனைத்து சிறைச்சாலைகளிலும் விஷேட அதிரடிப் படையினர் நுழைவாயிலில் Reviewed by Editor on August 25, 2020 Rating: 5