கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பொலன்னறுவையிலிருந்து வட மத்திய மாகாணசபைக்கு தெரிவாகும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் குரல் இம்முறையும் வட மத்திய மாகாண சபையில் ஓங்கி ஒலிக்குமா அல்லது ஓடி ஒழிக்குமா என்ற கேள்வி குறித்த மாவட்ட அரசியல் அவதானிகள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரான சஹீட் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய சேவைகள் அதிகப்படியானவை என்றும் மற்றைய முஸ்லிம் பிரதிநிதியால்
எதுவுமே செய்ய முடியவில்லை என்றும் ஒரு தரப்பு சொல்லி வருகிற நிலையில் மற்றைய தரப்பினர் எதிர்கட்சி மாகாண சபை உறுப்பினர் என்கிற படியால் அவரால் எதுவுமே செய்ய இயலாமல் போனது எனவும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
எது எப்படி போனாலும் குறித்த மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் மாகாண சபை தேர்தலை கருத்திற்க்கொண்டு காத்திரமான முடிவொன்றினை எடுக்கவேண்டியது அவசியமும் அவசரமானதோடு, அது அல்லாதவிடத்து இது வரை காலமும் தக்கவைக்கப்பட்டுக்கொண்டிருந்த மாகாண சபை முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு பொலன்னறுவை முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியில் அநாதரவான நிலைக்கு தள்ளப்படுவதை எவராலும் தடுத்திட இயலாது போகும்.
எனவே போட்டி பொறாமை மற்றும் பிரதேச வாதம் என்பனவற்றை புறம் தள்ளி யாராவது ஒருவர் வேட்பாளராக களமிறங்க வழி வகுக்கப்படும் எனில், நமது மாகாண சபை பிரதிநிதித்துவம் காக்கப்படும்.
அதுவும் ஆளும் தரப்பிலிருந்து என்றால் நமது தமிழ் பேசும் சமூகம் ஓர் விடிவை நோக்கி தமது கால்களிரண்டையும் நகர்த்தும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை.
நன்றி - பொலநறுவை டுடே
வடமத்திய மாகாண சபை பொலன்னறுவை முஸ்லிம் பிரதிநிதித்துவம் நிலைக்குமா??
Reviewed by Editor
on
August 27, 2020
Rating:
Reviewed by Editor
on
August 27, 2020
Rating:
