சரித்திர நாயகன் வென்றான்

(றிஸ்வான் சாலிஹூ)

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், திகாமடுல்ல மாவட்டத்தில் தனது குதிரை சின்னத்தில் களமிறங்கி 35697 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் தேசிய காங்கிரஸின் தலைவர் கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள்.

அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய ஊர்களில் இருந்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்களுக்கு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற இந்த தலைமைக்கு கோட்டாபய அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

சரித்திர நாயகன் வென்றான் சரித்திர நாயகன் வென்றான் Reviewed by Editor on August 07, 2020 Rating: 5