அதிகாலை நிகழ்ந்த சோகம்


யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (06) வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வீட்டிலிருந்த 67 வயதுடைய குடும்பப் பெண் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை நிகழ்ந்த சோகம் அதிகாலை நிகழ்ந்த சோகம் Reviewed by Editor on August 06, 2020 Rating: 5