(றிஸ்வான் சாலிஹூ)
மகளிர் விவகாரம், சிறுவர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற Covid -19 இல் இருந்து முன்பள்ளி சிறார்களை பாதுகாக்கும் நோக்குடன் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பிரிவினால் முன்பள்ளிகளுக்கான வெப்பநிலை அளவிடும் கருவி ( thermometer ) மற்றும் கைகழுவும் உபகரணத் தொகுதிகள் ( hand wash basan with stand ) என்பன கடந்த செவ்வாய்க்கிழமை (11) அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், உளவள ஆலோசகர் ஜனாப்.ஆப்தீன் மற்றும் பிரிவின் ஏனைய உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியைகள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா அவர்கள் ரெயின்போ கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எஸ்.எம்.அஸ்பி அவர்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
Reviewed by Editor
on
August 14, 2020
Rating:
