(றிஸ்வான் சாலிஹூ)
கல்லோயா கம்பெனிக்கு எதிராக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காணிக்குள் அத்துமீறி கல்லோயா கம்பனிக்கார்ர்கள் இயந்திரத்தை கொண்டு வந்து உழவுத் தொழிலை மேற்கொண்டததால் அங்கு இன்று (26) புதன்கிழமை காலை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
சுமார் 6 வருடங்களாக ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்துக்கொண்டும் , எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் நீதி மன்றத்தின் தடை உத்தரவையும் மீறி ஏழை விவசாயிகளின் விவசாயக்காணிகளை கல்லோயா கம்பனிக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர் என்று பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
இன்னும் எத்தனை நாட்கள்தான் நீதிக்காக கரம் ஏந்தி நிற்க்கப்போகிறோம்.?எத்தனையோ விடயங்களுக்காக முன்னிற்கும் அதிகாரிகளே! அரசில்வாதிகளே! ஏழை விவசாயிகளின் நியாயமான நீதிக்காக குரல் கொடுக்க மாட்டீர்களா என்று கருத்துப்பட அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கல்லோயா பெருந்தோட்ட கம்பனிக்கார்ர்களின் அத்துமீறல்
Reviewed by Editor
on
August 26, 2020
Rating:
Reviewed by Editor
on
August 26, 2020
Rating:





