சம்மாந்துறை நெய்னாகாடு பரங்கி மலை பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்தின் குடியேற்றம் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து பிரதேச மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்ட சம்மாந்துறை பிரதேச செயலாளரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்.
மேலும் இராணுவத்தின் இத்திடீர் குடியேற்றம் தொடர்பிலுள்ள உண்மைத் தன்மையை அறிந்து அதற்கான முறையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தான் மேற்கொள்ளவுள்ளதாகபாராளுமன்ற உறுப்பினர் அம்மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
Reviewed by Editor
on
August 26, 2020
Rating:

