பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆசனங்கள் உள்ளன, அதில் தேசிய காங்கிரஸும் அடங்கும்- ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு
(றிஸ்வான் சாலிஹூ)
புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கருத்து வெளியிட்டார்.
ஆகஸ்ட் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது 2/3 பெரும்பான்மை அதிகாரமும் அரசியலமைப்பை மறுசீரமைக்கும் அதிகாரமும் புதிய அரசாங்கத்திடம் இருக்கும் என அவர் மேலும் கூறினார்.
டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், அதாவுல்லாஹ், பிள்ளையான் போன்றோரின் கட்சிகள் தம்முடன் இணைந்து பணியாற்றும் கட்சிகள் என்பதால், புதிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 150-இற்கும் அதிக ஆசனங்கள் தமது கட்சியிடம் இருப்பதாக ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Editor
on
August 07, 2020
Rating:
