(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திற்கு தரம் 11இல் (2020ஆம் ஆண்டு) கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களால் போட்டோ கொப்பி இயந்திரம் வியாழக்கிழமை (27) கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பாடசாலையில் அண்மைக்காலமாக நிலவி வந்த பெளதீக வளங்களின் ஒன்றான போட்டோ கொப்பி இயந்திரத்தை பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகளிடம் எத்திவைத்த இந்த வேண்டுகோளை இப்பாடசாலையில் 2020ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களின் முயற்சியினால் தரம் 11ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி தேவைகளுக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கும், பெளதீக வள அபிவிருத்திகளுக்கும் அப்பாடசாலையின் பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியோரின் ஒத்துழைப்பு மிக அவசியமான விடயமாகும்.
இப்போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், இதனை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்த பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
August 29, 2020
Rating:

