இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது (13) வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் செப்டம்பர் 16, 17 ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

செப்டம்பர் 16 ஆம் திகதி காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானபீட மற்றும் பொறியியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக செப்டம்பர் 17 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு  இடம்பெறவுள்ளதுடன் பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா Reviewed by Editor on August 29, 2020 Rating: 5