(றிஸ்வான் சாலிஹூ)
உள்ளக வெளியக சவால்களை சந்தித்த பின்னும் தமிழ்த் தேசியப் போராட்டம் நீட்சி பெற்றுள்ளது. காலநீட்சியில் படிமுறை ரீதியாக மாற்றங்களை கண்டபோதும் இலக்கு மாறமால், புதிய பரிமாணத்தோடு எமது இலட்சியப் போராட்டம் தொடர்கிறது. அதன் சாட்சியாக இங்கே அணிதிரண்டு நாங்கள் நிற்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
வரலாறு வழிகாட்ட, காலத்தின் கட்டளைக்கு ஏற்ப வரலாற்றுப் பொறுப்பை சுமந்துள்ள நாம், 'தேச நிர்மாணிப்பாளர்களாக' நிலைமாற்றம் அடைய கடந்த கால தியாகங்களை மனதிலிருத்தி உறுதிகொள்கிறோம். ஆத்மார்த்த ரீதியாக எம்மை எமது போராட்டத்தோடு இணைத்து, எமது விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள தடைகளை தகர்த்து, தமிழ்த் தேசத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் மீட்க தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு போராடுவோம் என உறுதிகொள்கிறோம்.
சுதந்திர வேட்கையையும் இலட்சிய தாகத்தையும் எங்களுடைய சந்ததிக்கு எடுத்து செல்வதற்கு திடம்கொள்வதோடு, எமக்கு தரப்பட்ட பணிகளை, எத்தடை வரினும் முறியடித்து முன்னகர்த்த உறுதிகொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
August 15, 2020
Rating:
