(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று பிரதேச பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்றது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன், இதன் பிரகாரம் அக்கரைப்பறது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 133 பட்டதாரிகளுக்கு புதன்கிழமை (02) அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் நியமனக்கடிதங்களை வழங்கி பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் இன்று வருகை தராத பெயர்ப்பட்டியலிலுள்ள ஏனைய பட்டதாரிகள் தாமதியாது பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.கே.றொசின்தாஜ் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், கணக்காளர் எஸ்.எல்.சர்த்தார் மிர்ஸா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக், நிருவாக கிராம உத்தியோகத்தர் , சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர், மேலதிக மாவட்ட பதிவாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 03, 2020
Rating:






