ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

(றிஸ்வான் சாலிஹூ)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (02)  இடம்பெற்றது.

இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர், நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா உள்ளிட்ட பிரதேச செயலகத்தின் பிரிவுத் தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நியமன நிகழ்வின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சிகள் தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். Reviewed by Editor on September 03, 2020 Rating: 5