அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் 28 நியமனம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான 28 அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இந்த குழுக்களின் தலைவர்களாகச் செயற்படுவர். இதற்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் தெரிவுக் குழுவினால் பரிந்துரைக்கப்படும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுக்களில் உள்ளடங்குவார்கள். 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசைனக் குழுவினதும் கூட்ட நடப்பெண் 3 உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.

அமைச்சுசார் ஆலோசைனக் குழுக்களை நியமிப்பது தொடர்பான தகவல்கள் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களால் நாளை (08) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். 


அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் 28 நியமனம் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் 28 நியமனம் Reviewed by Editor on September 07, 2020 Rating: 5