நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என, சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்திருந்தது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் நடந்த கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகரவுக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, அந்த பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கு பொது ஜன பெரமுன கட்சியில் இருந்து மற்றுமொரு உறுப்பினரை தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விருப்பு வாக்கு பட்டியலில் இடத்தில் அதிகூடிய வாக்குகள் பெற்றுள்ள இரு வேட்பாளர்களான ரஞ்சித் பண்டார மற்றும் ரோஹன கொடிதுவக்கு ஆகிய இருவரும் 53,261 வாக்குகளை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்காக நாணயச் சுழற்சி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
September 01, 2020
Rating:
