அட்டாளைச்சேனையில் பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது

(எஸ்.எம்.அறூஸ்)

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்திற்கமைய, அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 112 பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் இன்று (02) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை, ஒலுவில், தீகவாபி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இப்பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமட் நஸீல்,   பிரதேச செயலக   கணக்காளர் ஏ.எல். றிபாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹூசைனுடீன், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழீல், மற்றும் இரானுவ அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள்தோறும் வழங்கப்பட்டு வரும் இந்நியமனங்களுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலக பிரிவுகளிலிரந்தும்  2119 பட்டதாரிகள் இந்நியமனங்களைப் பெற்று வருகின்றனர்.




அட்டாளைச்சேனையில் பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது அட்டாளைச்சேனையில் பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது Reviewed by Editor on September 02, 2020 Rating: 5