கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட பிள்ளையான் எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (03) வியாழக்கிழமை சாட்சியமளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு சிறையில் இருந்து கொழும்புக்கு இன்று (02) காலை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் சிறையிலுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமைக்கமைவாகவே அவர், இன்று விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.



கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட பிள்ளையான் எம்.பி  கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட  பிள்ளையான் எம்.பி Reviewed by Editor on September 02, 2020 Rating: 5