(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த டிஜிட்டல் X-Ray தொழிநுட்ப வசதி உத்தியோகபூர்வமாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர். ஐ.எம்.ஜவாஹீர் அவர்களினால் திங்கட்கிழமை (07) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கதிரியக்க வைத்திய நிபுணர் டாக்டர். ஹிதாயா தாஜூடீன், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிரேஷ்ட கதிரியக்கவியளாளர், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Digital X Ray தொழினுட்பவசதி மூலமாக நோயாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மென்மேலும் மேம்படுவது சிறந்தம்சமாகும்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவை நிறைவேறியது.
Reviewed by Editor
on
September 08, 2020
Rating:
Reviewed by Editor
on
September 08, 2020
Rating:



