சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தார்

                              

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக எதிர்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் இன்று (08) பாராளுமன்றத்தில் கலந்து கொண்டிருந்தார்.

பிரேமலால் ஜயசேகரவின் பதவி பிரமாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய அமர்வில் எதிர்க்கட்சியினர் கருப்பு பட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தார் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தார் Reviewed by Editor on September 08, 2020 Rating: 5