சங்கமன்கண்டி கடற்கரை பிரதேச கடலில் மசகு எண்ணெய் கப்பலில் தீ பரவல்

அம்பாறை மாவட்ட, திருக்கோயில் பிரதேசத்திற்குட்பட்ட, சங்கமன்கண்டி பிரதேச கடற்பகுதியில் கடலில் மிதந்து வந்த மசகு எண்ணெய் கப்பலில் தீ பரவியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளார்கள்.

"எம்.ரீ.நியூ டையமண்ட்" என்ற பனாமா நாட்டுக்கு சொந்தமான இந்த கப்பல்  இந்தியா நோக்கி பயணிக்கும் போதே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதோடு, இந்த கப்பலில் பயணித்த பணியாளர்களை மீட்கும் முயற்சியில் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்படை தளங்களை சேர்ந்த படகுகள் அவ்விடத்திற்கு சென்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



சங்கமன்கண்டி கடற்கரை பிரதேச கடலில் மசகு எண்ணெய் கப்பலில் தீ பரவல் சங்கமன்கண்டி கடற்கரை பிரதேச கடலில் மசகு எண்ணெய் கப்பலில் தீ பரவல் Reviewed by Editor on September 03, 2020 Rating: 5