கல்முனை நாஹூர் ஆண்டகை தர்காவில் அதாஉல்லாஹ்வுக்கு அமோக வரவேற்பு!!!

(ஏ.எம்.ஆஷாத்)

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ அல்-ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (4) கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்-ஹாஜ் எஸ்.எம்.ஏ. அஸீஸ், சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கட்சியின் பிரதித் தலைவர் டாக்டர் உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எம். சப்றாஸ் மன்சூர், கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






கல்முனை நாஹூர் ஆண்டகை தர்காவில் அதாஉல்லாஹ்வுக்கு அமோக வரவேற்பு!!! கல்முனை நாஹூர் ஆண்டகை தர்காவில் அதாஉல்லாஹ்வுக்கு அமோக வரவேற்பு!!! Reviewed by Editor on September 05, 2020 Rating: 5