(நூருள் ஹுதா உமர்
கடந்த பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரசுக்கு வாக்களித்த சா
ய்ந்தமருது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம மரைக்காயர் வை.எம். ஹனிபா தலைமையில் இன்று (04) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம்.சலீமின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இங்கு உரையாற்றிய ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் எம்.பி,
சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் மிகப்பெருமதியாக அமைந்திருந்தது எனவும், சாய்ந்தமருது மண்ணின் மகிமை தொடர்பிலும் சிலாகித்து பேசியதுடன் தனது நன்றி நவிழலை சாய்ந்தமருதிலிருந்தே ஆரம்பிக்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம்.ஷியா, தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்லவில் குதிரை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளி மரைக்காயர் சபை உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 04, 2020
Rating:


