அக்கரைப்பற்றில் அதாஉல்லாஹ்வுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு!!!

(றிஸ்வான் சாலிஹூ)

கடந்த பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரசுக்கு அக்கரைப்பற்றில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும், பள்ளிவாசல்களில் துஆப் பிரார்த்தனையும் இன்று (05) சனிக்கிழமை மாலை ஆரம்பமானது.





இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அவர்களும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கட்சியின் பிரதித் தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கெளரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸஹீ, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.



இன்று மாலை அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதேசத்தில் இருந்து ஆரம்பமான இந்த நன்றி தெரிவிப்பு ஊர்வலம் அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபை எல்லைகளுக்குட்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல்களில் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டதோடு, அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் உள்ள பெளத்த மதஸ்தானம் மற்றும் இந்து மதஸ்தானங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நன்றியை தெரிவிப்பதற்கு சென்றிருந்தார்.





அக்கரைப்பற்று " வோட்டர் பார்க்கில்" அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட மேடையில், கலை கலாசாரங்களுடன் கூடிய இன்றைய இறுதி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ‌.எல்.எம்‌.அதாஉல்லாஹ் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி உரையாற்றவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அக்கரைப்பற்றில் அதாஉல்லாஹ்வுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு!!! அக்கரைப்பற்றில் அதாஉல்லாஹ்வுக்கு  பொதுமக்கள் அமோக வரவேற்பு!!! Reviewed by Editor on September 05, 2020 Rating: 5