(ஒலுவில் அஸ்ஹர்)
2019 ஆம் ஆண்டு அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் தொடர்பான உதவி அரசாங்கப் பகுப்பாய்வாளர் (Government Examiner of questioned document -Government Analyst's Department) பதவிக்கான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் ஒலுவிலை பிறப்பிடமாக கொண்ட ஜீஸான் முகம்மட் தேர்வாகியுள்ளார்.
ஒலுவில் முதலாம் பிரிவில் வசிக்கும் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர் ஐ.எல் பதுறு சாஹிபு-கே.கைறுன் நிஸா தம்பதிகளின் மூன்று பிள்ளைகளில் 27 வயது நிரம்பிய ஜீஸான் முகம்மட் இரண்டாவது செல்வப் புதல்வன்.தனது ஆரம்ப கல்வியை அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலயத்திலும்,உயர் கல்வியை நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் பயின்றவராவார்.
மேலும் தேசிய ரீதியாக நடைபெற்ற குறித்த போட்டிப் பரீட்சையில் தேர்வு செய்யப்பட்ட, நான்கு தமிழ் பேசும் நபர்களுள் ஒரே ஒரு முஸ்லிம் சமூகம் சார்ந்தவராக ஜீஸான் முகம்மட் காணப்படுவதுடன் ,தனது சொந்த மண்ணில் இத்துறையில் தடம்பதிக்கும் முதல் உத்தியோகத்தராகவும் திகழுகிறார்.அத்தோடு இவர் தனது குடும்பத்திற்கும்,பிறந்த மண்ணுக்கும் இதனூடாக பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
September 06, 2020
Rating:
