பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை

(பர்ஹானா பதுறுதீன்)

சிறைக்கைதிகள் 440 இற்கும் அதிகமானோர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். அதனடிப்படையில், சிறைச்சாலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப் பட்டியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க,

வெலிக்கடை சிறைச்சாலையில்- 83 கைதிகள்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் - 06 கைதிகள்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் - 04 கைதிகள்

அநுராதபுரம் சிறைச்சாலையில் - 28 கைதிகள்

பதுளை சிறைச்சாலையில் - 07 கைதிகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் - 12 கைதிகள்

போகம்பர சிறைச்சாலையில் - 16 கைதிகள்

பூசா சிறைச்சாலையில் - 06 கைதிகள்

பல்லன்சேன சிறைச்சாலையில் - 07 கைதிகள்

காலி சிறைச்சாலையில் - 14 கைதிகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் - 12 கைதிகள்

குறுந்துகஸ்ஆர சிறைச்சாலையில் - 6 கைதிகள்

களுத்துறை சிறைச்சாலையில் -14 கைதிகள்

கேகாலை சிறைச்சாலையில் - 01 கைதி

குருவிட்ட சிறைச்சாலையில்- 35 கைதிகள்

மஹர சிறைச்சாலையில் - 30 கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில்-  01 கைதி

மொனராகலை சிறைச்சாலையில் - 13 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் - 12 கைதிகள்

பல்லேகலை சிறைச்சாலையில் - 54 கைதிகள்

பொலன்னறுவை சிறைச்சாலையில் -10 கைதிகள்

தல்தென சிறைச்சாலையில் - 24 கைதிகள்

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் - 20 கைதிகள்

திருகோணமலை சிறைச்சாலையில் - 03 கைதிகள்

வாரியபொல சிறைச்சாலையில் - 16 கைதிகள்

வவுனியா சிறைச்சாலையில் - 03 கைதிகள்

வட்டருக்க சிறைச்சாலையில் -05 கைதிகள்

வீரவில சிறைச்சாலையில் -02 என மொத்தமாக 444 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை Reviewed by Editor on September 01, 2020 Rating: 5