(றிஸ்வான் சாலிஹூ)
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 256 பட்டதாரிகளுக்கு இன்று (01) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் நியமனக்கடிதங்களை பட்டதாரிகளுக்கு வழங்கி வைத்ததுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இன்று (01) வருகை தராத பெயர்ப்பட்டியலிலுள்ள ஏனைய பட்டதாரிகள் தாமதியாது எமது பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் , சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எம்.எம் ஹுசைனா, பிரதேச செயலக உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 01, 2020
Rating:
