நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு


வெற்றி நாயகன் ஹரீஸ் எம்பி யினை பாராட்டி கெளரவிக்கும் மாபெரும் நிகழ்வு இன்று(01) கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் பிரமாண்டமான முறையில் சாய்ந்தமருது சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல் அப்துல் மஜிட்,கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப்,கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி), ஏ.எம் பைறோஸ்,எம்.எஸ்.எம் ஹரீஸ் நவாஸ்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம் பஸ்மீர்,எம்.என்.எம் றணீஸ்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.நிசார்த்தீன்,ஏ.எச்.எம் நபார்,மாளிகைக்காடு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எஸ்.நாசர்,புலவர்மணி மருதூர் ஏ மஜீட் உட்பட ஆயிரக்கணக்கான மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு Reviewed by Editor on September 01, 2020 Rating: 5