அட்டாளைச்சேனையில் புதிய ஊடகவியலாளர் அமைப்பு அங்குரார்ப்பணம்


(றிஸ்வான் சாலிஹூ)

"நாம் ஊடகர்  பேரவை" (We Journalists Forumபுதிய ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று இன்று (01) செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ. எல் மப்றூக் தலைமையில் அட்டாளைசேனை லொயிட்ஸ் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

"நாம் ஊடகர்  பேரவையின்"  ஸ்தாபக தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ. எல் மப்றூக், பொது செயலாளராக ஏ.பி.அப்துல் கபூர், பொருளாளராக றிசாத் ஏ காதர், அமைப்பாளராக ஏ.பி.எம் அஸ்ஹர், உபதலைவராக ஏ.புஹாது, உப செயலாளராக ரீ.கே றகுமதுல்லா, கணக்காய்வாளராக ஏ.றிம்சாத், இணைப்பாளராக றிப்தி அலி, ஊடக செயலாளராக யூ.கே.ஜெசீல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய ஊடகவியலாளர் அமைப்பின் அங்குராப்பண நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அட்டாளைச்சேனையில் புதிய ஊடகவியலாளர் அமைப்பு அங்குரார்ப்பணம் அட்டாளைச்சேனையில் புதிய ஊடகவியலாளர் அமைப்பு  அங்குரார்ப்பணம் Reviewed by Editor on September 01, 2020 Rating: 5