சடலமாக மீட்கப்பட்ட ஜோடிகள்

கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதி விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



சடலமாக மீட்கப்பட்ட ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்ட ஜோடிகள் Reviewed by Editor on September 10, 2020 Rating: 5